இது இந்தியாவா? “இந்தி”-யாவா..? புதைகுழி தோண்டுகிறவர்களே புதைந்து போவார்கள்..மு.க.ஸ்டாலின் ஆவேசம்..!

Published : Aug 10, 2020, 03:59 PM IST
இது இந்தியாவா? “இந்தி”-யாவா..? புதைகுழி தோண்டுகிறவர்களே புதைந்து போவார்கள்..மு.க.ஸ்டாலின் ஆவேசம்..!

சுருக்கம்

இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்'’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் அடைந்துள்ளார்.  

இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்'’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் அடைந்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் பேசியுள்ளார். அப்போது கனிமொழி தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கேட்டுள்ளார். ஆனால், அந்த அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே..? இந்தி தெரியாதா எனக் கேட்டுள்ள்ளார். 

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார். 

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!