சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் டோண்ட் வொரி... அட்ராசிட்டி பண்ணும் செல்லூர் ராஜூ..!

By vinoth kumarFirst Published Aug 10, 2020, 2:53 PM IST
Highlights

அதிமுக எப்போதும் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் தான் நடைபெறும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

அதிமுக எப்போதும் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் தான் நடைபெறும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி கண்மாய்ப் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று  நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- திமுக ஒரு குடும்ப கட்சி. அங்கு வாரிசு அரசியல் நடைபெறுகிறது. அதனால், மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி தற்போது கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வளர்ந்து வருகிறார். திறமை இல்லாத மு.க.ஸ்டாலின் திமுகவுக்கு தலைவராக உள்ளார். திமுகவினரிடையே ஒற்றுமையில்லை. கு.க.செல்வம் திமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்றது அவரது விருப்பம். 

எங்களது கருத்தை ஏற்று அதிமுகவிற்கு திமுகவினர் யார் வந்தாலும் வரவேற்போம். ஏன், பாஜகவின் நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வந்தாலும்கூட வரவேற்போம்.தேர்தலுக்காக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நன்றாக செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் பணியாற்றி வருகிறது. அதிமுக எப்போதும் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் தான் நடைபெறும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. தேர்தலுக்குப் பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே தமிழக முதல்வராவார். 

மேலும், பேசிய அவர் கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறது என்றார். சசிகலா பற்றி எங்களுக்கு கவலையில்லை. சசிகலா வெளியே வந்தாலும் அதிமுக மிகப்பெரிய வலுப்பெரும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

click me!