முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாசிட்வ்.. தொடர்பில் இருந்தவங்க டெஸ்ட் எடுக்க சொல்லி ட்வீட்..!

By vinoth kumarFirst Published Aug 10, 2020, 1:55 PM IST
Highlights

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 44,386-க்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சில மாநிலங்களில் முதல்வர்கள் கூட வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். 

click me!