மதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.!

By T BalamurukanFirst Published Sep 23, 2020, 9:12 AM IST
Highlights

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.இந்த செய்தி மதுரை மக்கள் மத்தியில் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
 

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.இந்த செய்தி மதுரை மக்கள் மத்தியில் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.

மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் சேங்கை ராஜன் (50). இவர் கடந்த 13ந் தேதி மதுரை மேலமடையைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் ரூ 30 ஆயிரம் மருத்துவ செலவுக்காகவட்டிக்கு கடன் வாங்கினார். இத்தொகைக்குரிய வட்டியுடன் அசல் தொகை கொடுத்துள்ளார்இதன்பின்பும் செங்கை ராஜனிடம் மோகன் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சேங்கைராஜன் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் மோகன் மீது புகார் கொடுத்தார் .இது தொடர்பாக அவரை விசாரணைக்கு வருமாறு அண்ணாநகர் போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை இதைத்தொடர்ந்து அவர் மீது கந்துவட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை போலீசார் தேடுகின்றனர். கரோனா ஊரடங்கின் போது படிப்பு செலவுக்காக சேமித்து வைத்த தொகையில் ஏழை மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கியதாக பிரதமரால் பாராட்டப்பட்ட நாவிதர் மோகன் மற்றும் மதுரை மாணவி  நேத்ராவின் தந்தை தான் கந்துவட்டி சட்டத்தில் சிக்கிய மோகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!