பிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்..! அவரது மகன் சரண் தகவல்..!

Published : Sep 23, 2020, 08:49 AM IST
பிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்..! அவரது மகன் சரண் தகவல்..!

சுருக்கம்

உணவு எடுத்துக் கொள்ளும் எஸ்.பி.பி., விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப ஆர்வமாக உள்ளார்,'' என, அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.  

உணவு எடுத்துக் கொள்ளும் எஸ்.பி.பி., விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப ஆர்வமாக உள்ளார்,'' என, அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான, பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆகஸ்ட் 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு, நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இவருக்கு சிகிச்சையளிக்க தமிழக அரசு முன்வந்தது.அதையும் தாண்டி வெளிநாடுகளில் இருந்தும் டாக்டர்கள் கானொளிக்காட்சி மூலம் சிகிச்சையளித்து வந்தனர். பல்வேறு ஆபத்தான கட்டங்களை தாண்டி இன்று நலமுடன் இருக்கிறார் பாடகர் எஸ்பிபி என்கிற செய்தி உலக மக்கள் அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் இனிமையான குரலால் பலரையும் பரவசமடையச்செய்தவர் இவர். அதனால் தான் இவரது உயிருக்கு உலகமே பிரார்த்தனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.பி., மகன் சரண், சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...

"அப்பாவின் உடல் நிலை சீராக இருப்பதுடன், நல்ல முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறது. அவருக்கு, 'எக்மோ' மற்றும், 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை தொடர்ந்து வருகிறது.
'பிசியோதெரபி'யும் அளிக்கப்பட்டு வருகிறது. திரவ உணவு எடுத்துக் கொள்கிறார். விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப ஆர்வமாக இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

தனிக்கட்சியா..? அமித்ஷாவிடம் பேசியது என்ன? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!