மதுரை: இரட்டை கொலை சம்பவம்..ஊராட்சி செயலர் வீடு அடித்து நொறுக்கிய கும்பல்.. 20 பேர் மீது வழக்கு..!

By T BalamurukanFirst Published Oct 14, 2020, 9:04 PM IST
Highlights

குன்னத்தூர் ஊராட்சி தலைவரை கொலை செய்தது கூலிப்படையா? அல்லது உள்ளுர் ஆட்களா? என்கிற கோணத்தில் 
 தனிப்படை போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.ஊராட்சி செயலர் வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் 20பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது மதுரை போலீஸ்.
 


 குன்னத்தூர் ஊராட்சி தலைவரை கொலை செய்தது கூலிப்படையா? அல்லது உள்ளுர் ஆட்களா? என்கிற கோணத்தில் 
 தனிப்படை போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.ஊராட்சி செயலர் வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் 20பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது மதுரை போலீஸ்.

மதுரை மாவட்டம், குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், அந்த ஊராட்சியின் ஊழியர் முனியசாமி ஆகியோர் கடந்த 11ம் தேதி கும்பல் ஒன்றால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்தசம்பவத்தில் அதே ஊராட்சியின் முன்னாள் தலைவர் திருப்பதி, சக்கிமங்கலம் ஊராட்சி செயலரும், குன்னதூர் ஊராட்சியின் பொறுப்பு செயலருமான பால்பாண்டி ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என, போலீ்ஸ் சந்தேகிக்கிறது. இதற்கு காரணம் குன்னத்தூர் ஊராட்சிக்கு புதிய செயலர் நியமித்தல் தொடர்பாக கிருஷ்ணனுக்கும், பால்பாண்டிக்கும் இடையே சமீபத்தில் பிரச் னை ஏற்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக கொலை நடந்தி ருக்க வாய்ப்புள்ளது என, கருதும் கருப்பாயூரணி காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான தனிப்படையினர் இருவரிடம் தீவிர விசாரணை நடத்துகின்றனர். 

இந்த இரட்டை கொலை வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்.., ‘‘ ஊராட்சி செயலர் நியமனத்தில் தனக்கு எதிராக செயல்படும் கிருஷ்ணனை தீர்த்துக்கட்ட  பால்பாண்டி முடிவெடுத்திருக்கலாம். இதற்கு முன்னாள் தலைவரும் உடந்தையாக இருக்க வாய்ப்பு உள்ளது என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது. கிருஷ்ணனுக்கு எதிராக வேறு வகையில் கொலை செய்யும் அளவுக்கு முன்விரோதம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. பால்பாண்டி, திருப்பதி நேரடியாக ஈடுபடாமல் கூலிப்படை என்ற பெயரில் வெளி ஆட்களை வைத்து கொலை செய்திருக்கலாமா? என்ற வகையிலும் விசாரிக்கிறோம். கொலைக்கு வேறு காரணம் இருக்குமா? என்றும் விசாரிக்கப்படுகிறது. முக்கியமான வழக்கு என்பதால் உரிய ஆதாரத்துடன் கொலையாளிகளை கைது செய்தால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு நிற்கும் என்பதால் அந்த கோணத்தில் விசாரிக்கிறோம்,’’என்றனர்.

 

இதற்கிடையில்., கடந்த 13 ம் தேதி மாலை மதுரை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்து, கிருஷ்ணன், முனிய சாமி உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு வாகனங்களில் கொண்டு சென்றபோது, ஆத்திரமடைந்த சிலர் குன்னத்தூரிலுள்ள பால்பாண்டியின் ஓட்டு வீடு மீது கற்களை வீசியதோடு, உள்ளே புகுந்து சேதப்படுத்தினர். மேலும், வீட்டுக்கு பின்பகுதியில் இருந்த வைக்கோல் படப்புக்கும் தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக பால்பாண்டி கொடுத்த புகாரின்பேரில், குன்னத் தூரைச் சேர்ந்த   சிங்க்(29),  தமிழமுது(42), பாலமுருகன்(23),  அயன் காளிதாஸ் (28), முருகன் (38),  செல்வராஜ்(39),  சங்கர நாராயணன் (39),  முத்துக்குமார் (40), ஜெகநாதன்(34), ராம்குமார் (30), செல்லக் கண்ணு (45), முத்துக்குமார் (34),  முனீஸ்வரன் 28), அருண் (24), ஆதீஸ்வரன்(22),  பிரதீஸ்வரன் (25),  மணி(42), சுப்ரமணியன்(50), வெங்கடேஷ்(22), முத்துக்குமார் (22) ஆகிய 20 பேரை கருப்பயூரணி போலீஸார் கைது செய்துள்ளனர்.

click me!