
தமிழக பாஜக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “குஷ்பு அரசியலில் சாதாரண ஆள் கிடையாது. மற்ற ஆட்களை போல் அல்லாமல் ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர். 2014-ம் ஆண்டிலேயே பாஜகவில் இணைந்திருக்க வேண்டியவர். பிரதமர் மோடியை விமர்சனம் செய்தது எல்லாமே காங்கிரஸ் தந்த அழுத்தம் என்று அவரே கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதற்கு துணைவேந்தர்கள் நடவடிக்கை எடுப்பது அவர்களுடைய கடமை. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் செய்தது எதுவும் தவறில்லை.
பிரசாந்த் கிஷோர் மிகவும் திறமையானவர். அவர் வழிகாட்டும்போது யாருக்கு வழிகாட்டுகிறார் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது எந்த வாகனத்தை ஓட்டுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். பிரசாந்த் கிஷோர் நான்கு சக்கரமும் பிரேக்கும் இல்லாத வாகனத்தை ஓட்ட முயற்சிக்கிறார்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.