சென்னை தெற்கு மாவட்ட திமுகவில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த மடிப்பாக்கம் செல்வத்தின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் எதிரொலியாக, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அவரது காதல் மனைவி சமீனாவுக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது.
சென்னை மடிப்பாக்கத்தில் திமுக பெண் கவுன்சிலருக்கும் அவரது மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மருமகளின் மண்டையை மாமியார் உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மடிப்பாக்கம் செல்வம்
சென்னை அடுத்த மடிப்பாக்கத்தில் பிப்ரவரி 1ம் தேதி திமுகவின் 188வது வட்ட செயலாளராக உள்ள மடிப்பாக்கம் செல்வம் என்பவரை கூலிப்படை கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெறவிருந்த சூழலில் இந்த கொலை திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது கொலை தொடர்பாக அவருக்கு நெருக்கமான கட்சியினர் மற்றும் கூலிப்படையினர் என 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க;- ஹோட்டலில் ரூம் போட்டு அந்த பெண் என்னை கதற கதற பலாத்காரம் செய்தார்.. காவல்நிலையத்தில் கதறிய ஆண்.!
தேர்தலில் வெற்றி பெற்ற சமீனா செல்வம்
சென்னை தெற்கு மாவட்ட திமுகவில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த மடிப்பாக்கம் செல்வத்தின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் எதிரொலியாக, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அவரது காதல் மனைவி சமீனாவுக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. அதை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சமீனா செல்வம், மக்கள் பணியில் ஈடுபட தொடங்கினார்.
மாமியார் தாக்குதல்
கணவர் செல்வம் இல்லாத நிலையில் அவருடைய தாய் லிசி(57) மருமகள் சமீனாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றும் மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதனையடுத்து, மாமியார் வீட்டிலிருந்த இரும்பு பூட்டைக் கொண்டு கவுன்சிலர் சமீனாவின் மண்டையை உடைத்துள்ளார். இதில், படுகாயமடைந்த சமீனா ரத்த வெள்ளத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சமீனா செல்வம் அளித்த புகாரின் பேரில் அவரது மாமியார் லிசி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- ஒன்றாக உட்கார்ந்து சரக்கு அடித்து.. பிரபல சீரியல் துணை நடிகைக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை..!