முதல் முறையாக பாஜக முதல்வருக்கு கொரோனா தொற்று... தனிமைப்படுத்திக் கொண்ட சிவராஜ் சிங் சவுகான்..!

By vinoth kumarFirst Published Jul 25, 2020, 1:18 PM IST
Highlights

மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனை படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். 

மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனை படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 48,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,36,861ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 757 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும்  31,358ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் ரீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை மத்திய பிரதேசத்தில் இதுவரை 26,210 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7,553 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 17,866 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 791 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!