4மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களையும், பாஜக இரண்டு மாநிலங்களையும் கைப்பற்றிய நிலையில், சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யி மூர்த்தி பவன் வெறிச்சோடி காணப்படுகிறது.
4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அதற்கு முன்பாக தற்போது நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. நாளை மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தெலுக்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதில் மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக தலா இரண்டு மாநிலங்களை கைப்பற்றும் நிலையில் பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.
வெறிச்சோடிய காங்கிரஸ் அலுவலகம்
அதே போல காங்கிரஸ் தொண்டர்களும் தெலங்கானா, சத்தீஸ்கரில் தங்கள் கட்சியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் இரண்டு மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் தமிழக காங்கிரஸ் அலுவலகமாக சத்யமூர்த்தி பவன் வெறிச்சோடி காணப்படுகிறது. தொண்டர்கள் யாரும் கட்சி அலுவலகத்திற்கு வராத காரணத்தால் எந்த வித கொண்டாட்டமும் நடைபெறவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் வருவார்கள் என பத்திரிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்த பின் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இதையும் படியுங்கள்
தேர்தல் முடிவுகள் 2023.. உச்சகட்ட பரபரப்பில் சத்தீஸ்கர் தேர்தல் களம் - காங்கிரசை நெருங்கும் பாஜக!