
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யபட்டிருக்கும் மதுசூதனன் வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கிவிட்டார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைதொடர்ந்து அதிமுக, திமுக, பா.ஜ,க, தேமுதிக, என்பன உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டனர். இந்த தேர்தலில் ஏழுமுனை போட்டி நடைபெற உள்ளது.
அதிமுக மூன்று அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. சசிகலா தரப்பில், டி.டி.வி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தீபா தரப்பில் அவரே நிற்பதாக அறிவித்துள்ளார்.ஒ.பி.எஸ் தரப்பில், ஆர்.கே.நகர் மண்ணின் மைந்தனான மதுசூதனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக சார்பில் புதுமகமான மருதுகனேஷ் களமிறங்குகிறார்.
தேமுதிக சார்பில் மதிவாணன் மனுதாக்களே செய்து விட்டார்.
சில நாட்களுக்கு முன் பாஜகவில் இணைந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் தேர்தல் பா.ஜ.க வேட்பாராக களத்தில் குதித்துள்ளார்.
மக்கள் நலக்கூட்டனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
மற்ற இரண்டு கட்சிகளான விசிகவும், சி.பி.ஐ கட்சியும் ஒதுங்கி விட்டதாக அறிவித்துள்ளன.
மதிமுக ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகவும், எந்த கட்சிக்கும் ஆதரவு தரப்போவதில்லை எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தனது ஆதரவுகள் எங்கே என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், ஒ.பி.எஸ் சார்பில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் ஆர்.கே.நகர் மண்ணின் மைந்தன் மதுசூதனன் தொகுதி மக்களிடையே ஆதரவு கேட்டு படைஎடுத்துள்ளர்.
இதனிடையே வடசென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுசூதனனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரவித்துள்ளனர்.
ஆர் கே நகர் தொகுதி 43- வது வட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் வட்ட செயலாளர் சநதனசிவா தலைமையில் வேட்பாளர் மதுசூதனன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து தேர்தல் பணிக்குறித்து ஆலோசனை செய்தனர்.
மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் கோவில்பிள்ளை அவர்கள் ஆர் கே நகர் தொகுதி வேட்பாளர் மதுசூதனன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததை யொட்டி மரியாதை நிமித்தமாக அவருக்கு இன்று சால்வை அணிவித்து வாக்கு சேகரித்தார் மேலும் 41-வது தெற்கு வட்டத்தில் உள்ள பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிக்க சென்ற மதுசூதனனுக்கு ஆர்.நகர் தொகுதி மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். இதனால் வெற்றி நமதே என்ற படு குஷியில் மதுசூதனன் என்றும் இளவட்டம் என்ற பாணியில் துள்ளிக்குதித்து வாக்கு சேகரித்து வருகிறார்.