
அவைத்தலைவர் :
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை ஏற்கக்கூடாது என, அவைத்தலைவர் மது சூதனன் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், அதிமுக பொதுச்செயலாளரை, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியாது என்றும், தொண்டர்கள் தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2012ல், கட்சியில் இருந்து சசிகலாவை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீக்கினார் என்றும், அதனை தொடர்ந்து 2012 மார்ச் 31ல், அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து போயஸ் இல்லத்திற்குள் சசிகலா நுழைந்தார்.
தற்காலிக பொதுச்செயலாளர் தேர்வு செய்வது என்பது , அதிமுக விதியில் இடமில்லை எனவும்அவைத்தலைவர் மது சூதனன் தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கை பிசைந்து நிற்கும் சசிகலா :
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்க கூடாது என , அதிமுக அவைத்தலைவர் மது சூதனன், தேர்தல் ஆணையத்திற்கே தற்போது மனு அளித்துள்ளதால் , தமிழக அரசியல் வட்டாரத்தில் இது ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும் என தெரிகிறது. இதனால்,அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா, கை பிசைந்து நிற்கிறார் .
சசிகலா நடவடிக்கை எடுப்பாரா ...?
அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா , ஒரு வேளை அவைத்தலைவர் மது சூதனன் மீது எதாவது நடவடிக்கை எடுத்தால், மேலும் பிரச்னை வலுக்கும் என்பதால் இதுவரை எந்த நடவடிக்கையும் அவைத்தலைவர் மதுசூதனன் மீது எடுக்கவில்லை. மேலும் அவைத்தலைவரே தற்போது, தன்னுடைய முழு ஆதரவையும் முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு கொடுத்துள்ளதால், சசிகலாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் :
இந்நிலையில், சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவலை அடுத்து, தற்போது பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல் துறையினர் , எம்எல்ஏக்களை மீட்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது வரை ஒரு தெளிவான முடிவு இன்னமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.