துரோகிகளை கூட வெச்சுக்கக் கூடாது... மரண அடியை மறக்காத மது... அடுத்த ஆப்பு ஜெயகுமாருக்கா?

 
Published : Jan 30, 2018, 10:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
துரோகிகளை கூட வெச்சுக்கக் கூடாது... மரண அடியை மறக்காத மது... அடுத்த ஆப்பு ஜெயகுமாருக்கா?

சுருக்கம்

madhusoodhanan and team action against minister jayakumar

தமிழகம் முழுவதும் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் மறியலில் ஈடுபட்டிருந்த நேரத்தில் பேருக்காக கொஞ்சம் கட்டணத்தை குறைத்துவிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்தில் தீப் டிஸ்கஷனில் இருந்தனர். இந்த கேப்பில் அதிமுக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமைத் தொடங்கி வைக்க இருவரும் அங்கே வந்த இவர்களுடன், அமைச்சர்கள் பெரும்பாலோனோர் வந்திருந்தனர். பழனிசாமியும் பன்னீரும் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்துவிட்டு, கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்களும், அவைத் தலைவர் மதுசூதனனும் பங்கேற்றனர்.

மரண அடியை மறக்காத மது...

முதலில் பேசியதே மதுசூதனன்தான். ‘ஆர்.கே.நகரில் நம் தோல்விக்குக் காரணம், நம் கட்சியில் உள்ள சிலரேதான். இதைப் பற்றி நான் ஏற்கெனவே உங்களுக்குத் தெளிவாகக் கடிதம் அனுப்பியிருக்கிறேன். ஆனால், இதுவரை நீங்க நடவடிக்கை எதுவும் எடுக்கவே இல்லை. அடிமட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் மட்டுமல்ல... சில அமைச்சர்களே எனக்கு எதிராக வேலை பார்த்திருக்காங்க. சில நிர்வாகிகளுக்கு தினகரன் மாச சம்பளமே கொடுத்திட்டு இருந்திருக்காரு. இதுக்கெல்லாம் ஆதாரங்கள் என்னிடம் இருக்கு. அதை நான் ஓ.பி.எஸ். கிட்ட கொடுத்திருக்கேன். எடப்பாடி அண்ணனுக்கும் இதெல்லாம் நல்லாவே தெரியும். நம்மை காலை வாரியவங்க யாருன்னு தெரிஞ்சும், இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. அம்மா இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாங்களா... அப்படி செஞ்சவங்க யாரா இருந்தாலும் அடுத்த நிமிஷம் அவங்களை வெளியே அனுப்பியிருக்க மாட்டாங்க? நீங்க ஏன் இன்னும் தயங்கிட்டு இருக்கீங்க...?’ என்று கொந்தளித்திருக்கிறார் மதுசூதனன்.

அவைத் தலையை கூல் ஆக்கிய எடப்பாடி...

கடுப்பின் உச்சத்தில் இருந்த அவைத் தலையை  சமாதானப்படுத்திய எடப்பாடி, ‘அண்ணா, உங்க கோபம் நியாயமானதுதான். ஆனால் ஒருவிஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்தியே ஆகணும்னு நினைக்கிறோம் ஏற்கனவே நம்மகூட இருக்கிறவங்களை எப்படி இழுக்கலாம்னு தினகரன் குரூப் ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ நாம நடவடிக்கை என்ற பெயரில் கட்சியை விட்டு நீக்கினால், அது அவங்களுக்கு வசதியாகப் போயிடும்.

இதுவரைக்கும் நாம நீக்கி இருக்கும் எல்லோருமே ஏற்கெனவே அணி மாறியவங்க மட்டும்தான். அதனால கொஞ்சம் பொறுமையாக இருங்க நடவடிக்கை எடுக்கலாம்னுதான் நாங்களும் காத்திருக்கோம். நீங்க சொன்னதுல இருந்து, யாரெல்லாம் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு இருக்காங்க என்பது எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு. அவங்க மேல நடவடிக்கை நிச்சயமாக எடுக்கலாம். நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க...’ என்று சொன்னாராம்.

கப்சிப் ஜெயகுமார்...

குறுக்கிட்டு பேசிய பன்னீரும், ‘யாரை என்ன செய்யலாம்னு நாங்க எல்லாமே பேசிட்டோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருந்துச்சு. ஆனால், எடப்பாடி அண்ணன் சில விஷயங்களை சொல்லியிருக்காரு. சீக்கிரமே களையெடுப்பு தொடங்கிடும். நல்லவங்களை விரட்டிடக் கூடாது. அதே நேரத்துல துரோகிகளை கூட வெச்சுக்கக் கூடாது என்பதில் நாங்களும் தெளிவாக இருக்கோம்..’ என்று மதுசூதனனை சமாதானப்படுத்தும் விதமாகப் பேசி இருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயகுமார் மதசூதனன் கடசியா நமக்கே ஆப்படிக்க கத்திருக்கிறாரே என கடைசி வரை எதுவுமே பேசாமல் எழுந்து சென்று விட்டாராம்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!