"தீபா நடத்துவது கட்சியே அல்ல" - உண்மையை போட்டுடைத்த மாதவன்

First Published May 23, 2017, 10:38 AM IST
Highlights
madhavan says that deepa has no party


தீபாவும், நானும் ஓர் அணியில் இணைவது குறித்து காலம் பதில் சொல்லும் என எம்.ஜெ.தி.மு.க. பொதுச்செயலாளர் கே.மாதவன் பேட்டி அளித்துள்ளார்.

எம்.ஜெ.தி.மு.க. சார்பில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் 27 மாவட்டத்துக்கு செயலாளர்கள் பட்டியலை அக் கட்சி பொது செயலாளர் கே.மாதவன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று வெளியிட்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; முதல் கட்டமாக 27 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளேன். 2–ம் கட்டமாக மீதம் உள்ள மாவட்ட செயலாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம். கட்சியை பலப்படுத்த மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன்.

தீபாவும், நானும் ஓர் அணியில் இணைவது குறித்து காலம் தான் பதில் சொல்லும். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நிறைவடைந்த பின்னர், சேலம் அல்லது திருச்சியில் கட்சியின் முதல் மாநாடு நடத்தப்படும். தீபா நடத்துவது கட்சியே அல்ல, பொதுத்தேர்தல் வந்தால்தான் பலம் பொருந்தியவர்கள் யார்? என்பது எல்லோருக்கும் தெரியும்.

எங்களுடைய கட்சி இடைத்தேர்தலை சந்திக்காது. நேரடியாக உள்ளாட்சி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை தான் சந்திப்போம். என்றார்.

மேலும் நானும், தீபாவும்  ஒரே தொகுதியில் போட்டியிட மாட்டோம். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் வற்புறுத்தியதால் தான், சேவை செய்யவேண்டும் என்பதற்காக நான் கட்சியை தொடங்கினேன். என்று  மாதவன் கூறினார்.

click me!