LGBTQIA+ எனப்படும் பால்புதுமையினர் சமூகத்தினரை எப்படி குறிப்பிட வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு விரிவான சொல் அகராதியை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்டுள்ளது. இது பல்புதுமையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், சமூகத்தில் அவர்களுக்கு கிடைத்த அங்கிகாரமாகவும் கருதப்படுகிறது.
LGBTQIA+ எனப்படும் பால்புதுமையினர் சமூகத்தினரை எப்படி குறிப்பிட வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு விரிவான சொல் அகராதியை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்டுள்ளது. இது பால்புதுமையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், சமூகத்தில் அவர்களுக்கு கிடைத்த அங்கிகாரமாகவும் கருதப்படுகிறது.
மனிதர்களாக படைக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, ஆண்டவன் படைப்பில் பல அச்சுப் பிழைகள் அடிக்கடி நிகழ்வதாகவும் வேடிக்கையாக சொல்லப்படுவதுண்டு, அவர்கள்தான் திருநங்கைகள், திருநம்பிகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், இன்னும் பல பல விநோத உணர்வுக்கொண்ட மனிதர்களாக உலா வருகின்றனர். தோற்றம் ஒன்றாகவும் உள்ளத்து உணர்வு வேறாகவும் உள்ளவர்கள் பலர் நம் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் பால்புதுமையினர் என்றும் வரையறுக்கப்படுகின்றனர்.
அனைவரைப்போல ஆசா பாசங்கள், இன்ப துன்பங்கள், வேதனை வலிகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், சுயமரியாதை எல்லாம் இவர்ளுக்கும் உண்டு, ஆனால் எந்த இடத்திலும் அங்கீகாரமின்றி சக மனிதராகவே கூட அனுமதிக்கப்படாமல் புறக்கணிக்கப்படும் சமூகமாக பால்புதுமையினர் இருந்து வருகின்றனர். உடலுக்கும் மனதுக்கும் இடையேயான போராட்டம், அதை சுதந்திரமாக வெளியில் சொல்லகூட முடியாத சிறை வாழ்க்கை இதுதான் அவர்களின் நிலையாக இருந்து வருகிறது. ஆனால் மெல்ல மெல்ல அவர்களுக்கான உரிமைக் குரல்கள் சமூகத்தில் எழத் தொடங்கியுள்ளன.
இதன் முன்னோடியாக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தபோது திருநங்கைகளும் இந்த சமுதாயத்தில் அங்கம்தான் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் நலன்களை உறுதி செய்யும் வகையில், திருநங்கைகள் நலவாரியம் அமைத்தார், அது அச் சமூகத்திற்கு மிகப்பெரிய ஊன்றுகோலாக முகவரியாக அமைந்தது, ஏராளமானோர் பயன் பெற்றனர், அவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டது.
திருநங்கைகளுக்கு பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது, இன்னும் அந்த சமூகம் தலைநிமிர்ந்து வருவதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. திமுக ஆட்சியில் தான் மூன்றாவது பாலினம் என்பதை குறிக்கும் வகையில் ஆண் ( Male), பெண் (Female), என்பது போல திருநங்கையர்கள் Transgender என்பதை குறிக்க (T) என்று குறிப்பிடப்பட்டது,
அந்த வரிசையில் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருநங்கையர் மட்டுமின்றி திருநங்கை, திருநம்பி தன்பாலின ஈர்ப்பாளர் Gay , Lesbian, FTM Transgender, Bisexual போன்ற பாலின பிரிவினைகளை " பால் புதுமையின்" என வரையறுத்து ஒவ்வொரு பிரிவினரையும் எப்படி குறிப்பிட வேண்டும் என்பது குறித்து விரிவான சொல் அகராதியை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிட்டுள்ளார். இது இச்சமூக மக்கள் மத்தியில் வரவேற்பையும் அவர்களுக்கு கிடைத்த அங்கிகாரமாகவும் பார்க்கப்படுகிறது.
யாரெல்லாம் பால்புதுமையினராக குறிக்கப்படுகின்றனர்:
ஒரு நபர் அனைத்து பாலினத்தவர்களிடமும் பாலியல் ரீதியாக ஈர்க்கப்படுகிற homoromantic ஆக இருக்கலாம், அவர்கள் சொந்த பாலினத்தவர்கள் உடன் மட்டுமே உறவு வைத்திருக்க விரும்பலாம், எதிர்பால் ஈர்ப்புகொள்ளாதோரையும், பிறப்பில் குறிக்கப்படும் பாலினத்தோடு அடையாளப்படுத்திக் கொள்பவர்களையும் குறிப்பிட பால்புதுமையினர் அல்லது குயர் எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்தில் குயர் என்னும் சொல் ஒரு மீட்டெடுக்கப்பட்ட சொல், கடந்த காலங்களில் சமூகத்தின் பாலின மற்றும் பாலீர்ப்பு எதிர்பார்ப்புக்கு ஒத்துவராதவர்களுக்கான வசைச் சொல்லாக இது இருந்தது, ஆனால் இப்போது LGBTIQA+ மக்கள் இதை தங்களுக்கானதாக மாற்றி தங்களை வரையறுத்துக் கொள்வதற்கு பயன்படுத்துகிறார்கள். மிகை பாலினம் மற்றும் எதிர்பால் ஈர்ப்பு சார்ந்த அடையாளங்கள் மற்றும் சிந்தனைகள் பழமை வாதத்தை மையப்படுத்தி இருக்கும் நிலையில் அதில் இருந்து நகர்ந்து அனைத்து பாலின பாலீர்ப்பபு, பால் பண்பு அடையாளங்களையும் சிந்தனைகளையும் உள்ளடக்கி காலத்திற்கேற்ப புரிதலோடு தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்பவர் என்கிற அர்த்தத்தில் பால்புதுமையினர் எனும் வார்த்தை தமிழில் பயன்படுத்தப்படுகிறது.
இதில் ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள், இரு பாலீர்ப்பு கொண்டவர்கள், மருவிய மாற்றுப் பாலினத்தவர், பால்புதுமையர், ஊடு பால் மக்கள், அல்பாலீர்ப்பு கொண்டவர்கள், பலபாலிர்ப்பு கொண்டவர்கள்,, ஆதிக்கப் பாலினம் மற்றும் எதிர்பாலீர்ப்பு அப்பாற்பட்ட பண்புகளைக் கொண்டவர்கள் ஆகியோர். இந்த வரையறைக்குள் வருகின்றனர் இந்த சொல் சில நேரங்களில் LGBT, LGBTQ, LGBTQ+ என்றும் குறிப்பிடப்படும் என தமிழக அரசின் அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.