பொன்முடியை காய்ச்சி எடுத்த மு.க.ஸ்டாலின்... போட்டுக்கொடுத்த திருமா..!

By Thiraviaraj RMFirst Published Apr 16, 2019, 3:01 PM IST
Highlights

திமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளரான பொன்முடி தங்களது கட்சி வேட்பாளரை கண்டுகொள்ளவில்லை என  திருமாவளவன் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றதால் காய்ச்சி எடுத்து விட்டாராம் மு.க.ஸ்டாலின். 
 

திமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளரான பொன்முடி தங்களது கட்சி வேட்பாளரை கண்டுகொள்ளவில்லை என  திருமாவளவன் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றதால் காய்ச்சி எடுத்து விட்டாராம் மு.க.ஸ்டாலின். 

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி. சென்னை அண்ணாநகரில் ஆர்த்தோ மருத்துவராக தொழில் செய்து வந்தவரை முதல் முறையாக தேர்தல் களத்திற்கு இழுத்து வந்துள்ளார் அவரது தந்தை பொன்முடி. கெளதம சிகாமணியின் வெற்றிக்காக தெருத்தெருவாக, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார் பொன்முடி. விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்பதால் தொகுதி முழுவதும் தன்னுடைய ஆதரவாளர்களைக் களமிறக்கியிருக்கிறார். 

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமான பிறகும் இங்குள்ள சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் பொன்முடியின் வாரிசுக்கு வாய்ப்பு கொடுத்ததால் அதிருப்தியில் உள்ளனர் கட்சி நிர்வாகிகள். கோஷ்டிப் பூசல் கெளதம சிகாமணிக்குத் தொய்வை ஏற்படுத்துகிறது. இதனை மனதில் கொண்டு கள்ளக்குறிச்சி தொகுதியில் மட்டுமே வலம் வருகிறார் பொன்முடி.  

இதனால் விழுப்புரம் தொகுதியை பொன்முடி கண்டுகொள்ளவேயில்லை. விழுப்புரம் தொகுதியில், திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிகுமார். இவருக்கு, தி.மு.க., மாவட்டச் செயலாளர் பொன்முடி, சரியாக ஒத்துழைப்பு தரவில்லை. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் கூறியிருக்கிறார் ரவிகுமார். ஸ்டாலின் லைனுக்கு சென்று திருமா முறையிட்டிருக்கிறார். உடனே, பொன்முடியை கூப்பிட்டு, கடுமையாக திட்டியிருக்கிறார் ஸ்டாலின். இதனால், பொன்முடி ரொம்பவே நொந்து போய் விட்டாராம். இதனால், ரவிகுமாரின் வெற்றிக்கு பாதிப்பு வருமோ' என பயத்தில் இருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள். 

click me!