சசிகலா சிறையில் இருக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் !! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி !!

Published : Apr 16, 2019, 02:22 PM IST
சசிகலா சிறையில் இருக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் !!  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி !!

சுருக்கம்

சசிகலா சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் டி.டி.வி.தினகரனின் எண்ணம்.என்றும்,  எந்த கட்சியாக இருந்தாலும், தான் தான்  தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தினகரன் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.  

விருதுநகர் பகுதியில்  பரபப்புரை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது யார் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள்?  யார் பக்கம் குண்டர்கள் உள்ளார்கள் ? என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23-ந் தேதி தெரியும் என கூறினார்..

சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரையே பயன்படுத்த வில்லை. சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டுவர தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுயநலத்தோடு செயல்பட்டுவருகிறார் என அமைச்சர் குற்றம்சாட்டினார்.

சசிகலா சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம். எந்த கட்சியாக இருந்தாலும், தான் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தினகரன்.

நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., காங்கிரஸ் தான். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டும் என்று வாதாடியது நளினி சிதம்பரம் தான். அ.தி.மு.க. அரசுக்கும், முதல்வருக்கும் தான் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுவதற்கு அருகதை இருக்கிறது.மத்தியில் ஆட்சியில் நாங்கள் பங்கு பெற உள்ளோம். அப்போது இதற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்.


40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 22 சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மக்கள் அலை அரசுக்கு எதிராக இல்லை. இந்த அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!