மிசா துயரங்களைக்கூட தாங்கிக்கொண்டேன்... இப்போது கேடுகெட்ட ஜென்மங்களால் வேதனைப்படுகிறேன்.. போட்டுத் தாக்கிய மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Nov 17, 2019, 8:10 AM IST
Highlights

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பினாமி பெயரில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதை ஆதாரத்துடன் சொன்னேன். இன்னும் அதற்கான விளக்கம் வரவே இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், குவாரி ஊழல்களைப் பட்டியலிட்டோம். அதற்கும் பதில் இல்லை. ஊழலின் ஊற்றுக்கண்ணாக திழைப்பவர்கள் இரண்டு பெல் அமைச்சர்கள். பெல்  என்றால் மணி. ஒரு மணி, தங்கமணி, இன்னொரு மணி வேலுமணி. இவர்கள் இருவரும்  எடப்பாடிக்கு இரண்டு கண்கள். இவர்கள் ஊடகங்களின் பக்கம் வரவேமாட்டார்கள். எடப்பாடி அரசை காப்பாற்றுவதற்கான எல்லா பணிகளையும் செய்வது இவர்கள்தான். 

 மிசாவில் சிறையில் இருந்து கடுமையான துயரங்களை அனுபவித்தபோதுகூட தாங்கிக் கொண்டேன். ஆனால்,   தற்போது கேடு கெட்ட ஜென்மங்கள் அதனை சொல்லி விமர்சிப்பதால் வேதனைப்படுகிறேன்.  இந்த விஷயத்தில் என்னை விமர்சிக்க யாருக்கும் எந்தத் தகுதியும் அருகதையும் கிடையாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காட்டமாக விமர்சித்தார்.
திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கும் பொதுக்கூட்டம்  தருமபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்தோம். தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளுக்கும் திமுக எம்பிக்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். இந்த வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்கள்தான் திமுகவையும், தனிப்பட்ட முறையில் என்னையும் விமர்சிக்கிறார்கள்.


ஆளுங்கட்சி மீதான பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகளை எல்லாம் ஊடகங்கள் துணிச்சலுடன் விவாதிப்பதும் இல்லை; கேள்வி கேட்பதும் இல்லை. ஆனால், திமுக மீது தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை ஊடகங்கள் வைத்து வருகின்றன. தமிழகத்தில் நாம் தான் ஆட்சி செய்வதைப்போல நம்மை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக, பாஜக ஆட்சிகளை விமர்சிப்பதில்லை. இப்போது மிசாவில் இருந்தாரா மு.க.ஸ்டாலின் என்று கேள்வி எழுப்புகிறார்கள். மிசாவில் சிறையில் இருந்து கடுமையான துயரங்களை அனுபவித்தபோதுகூட தாங்கிக் கொண்டேன். ஆனால்,   தற்போது கேடு கெட்ட ஜென்மங்கள் அதனை சொல்லி விமர்சிப்பதால் வேதனைப்படுகிறேன்.  இந்த விஷயத்தில் என்னை விமர்சிக்க யாருக்கும் எந்தத் தகுதியும் அருகதையும் கிடையாது.


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பினாமி பெயரில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதை ஆதாரத்துடன் சொன்னேன். இன்னும் அதற்கான விளக்கம் வரவே இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், குவாரி ஊழல்களைப் பட்டியலிட்டோம். அதற்கும் பதில் இல்லை. ஊழலின் ஊற்றுக்கண்ணாக திழைப்பவர்கள் இரண்டு பெல் அமைச்சர்கள். பெல்  என்றால் மணி. ஒரு மணி, தங்கமணி, இன்னொரு மணி வேலுமணி. இவர்கள் இருவரும்  எடப்பாடிக்கு இரண்டு கண்கள். இவர்கள் ஊடகங்களின் பக்கம் வரவேமாட்டார்கள். எடப்பாடி அரசை காப்பாற்றுவதற்கான எல்லா பணிகளையும் செய்வது இவர்கள்தான். இதில், வேலுமணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் என்பதை விட, ஊழல்  ஆட்சித்துறை அமைச்சர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.


தற்போது டெங்கு காய்ச்சலுக்கு விழிப்புணர்வு என்ற பெயரில் மாதம் 100 கோடி வீதம் 6 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி ஊழல் நடந்துள்ளது. மின் துறை உதிரிபாகங்கள் வாங்குவதில் மலையளவு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. குடிமராமத்து பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. நீட் தேர்வு, உதய் திட்டம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, புதிய கல்விக்கொள்கை, மோட்டார் வாகன சட்ட அமல் என மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் எல்லா விஷயங்களுக்கும் அதிமுக அரசு காரணமாக இருந்துள்ளது. உள்ளூரில் எந்தத் திட்டமும் இல்லை. இதனால், வெளிநாட்டு  முதலீடு என்று  சொல்லி மக்களை ஏமாற்றுவதற்காக அமெரிக்கா, லண்டன், துபாய் எனச் செல்கிறார்கள். ஆனால், எந்த முதலீட்டாளரும் இந்த  ஆட்சியை  நம்ப தயாரில்லை.


ஏன் என்றால், இது உதவாக்கரை அரசு. அப்படியே  நம்பி  தொழில் முதலீடு செய்ய வந்தாலும் இவர்கள் கேட்கும் கமிஷனை பார்த்து  மயங்கி  விழுந்து விடுகிறார்கள். முதலீடு செய்பவர்களுக்கு  ஆட்சி செய்பவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டால்தான் முதலீடு செய்ய வருவார்கள். ஆனால், தமிழகத்தில் தொழில் செய்வோர், தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிமாநிலங்களுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தொழில் முடக்கம், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாத அளவுக்கு பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது.
மக்கள்நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் உரிய கவனத்தை செலுத்திட வேண்டும். இல்லாவிட்டால் திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். பள்ளத்தில் விழுந்து கிடக்கும் தமிழகத்தை மீட்கும் இந்த போராட்டம் வெற்றி பெறும்போது திமுக கோட்டையில் கொடியேற்றும்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

click me!