பள்ளி நண்பர்களுடன் மலரும் நினைவில் மூழ்கிய ஸ்டாலின்... வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என ஹேப்பி!

By Asianet TamilFirst Published Jan 4, 2020, 9:49 PM IST
Highlights

அதில், “50 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பயின்ற சென்னை MCC பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மனதுக்கு நெகிழ்ச்சி தரும் பல்வேறு 'மலரும் நினைவு'களை பழைய நண்பர்களுடனும்- ஆசிரியர்களுடனும் பகிர்ந்து கொண்டேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி!” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு தான் படித்த பள்ளியில்  தன்னுடன் படித்த மாணவர்களைச் சந்தித்து உரையாடினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். 
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியில் 1965 -70 வரை 6ம் வகுப்புமுதல் 11ம் வகுப்புவரை படித்தார். இந்தக் காலகட்டத்தில் படித்த மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவரான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 50 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் படித்த பள்ளி நண்பர்களை அடையாளம் கண்டு ஸ்டாலின் பேசி மகிழ்ந்தார். பள்ளியைச் சுற்றி வந்தும், தாங்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருந்த இடத்திலும் அமர்ந்து பழைய நினைவுகளில் ஸ்டாலின் மூழ்கினார்.

 
பள்ளியில் ஒரு மணி நேரம் இருந்த மு.க. ஸ்டாலின் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பள்ளி ஒன்று கூடல் நிகழ்ச்சியில் பங்கேற்றது பற்றி மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளார். அதில், “50 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பயின்ற சென்னை MCC பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மனதுக்கு நெகிழ்ச்சி தரும் பல்வேறு 'மலரும் நினைவு'களை பழைய நண்பர்களுடனும்- ஆசிரியர்களுடனும் பகிர்ந்து கொண்டேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி!” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

click me!