எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் ரஜினி கட்சி தொடக்கம்... எம்.ஜி.ஆர் தொண்டர்களை அள்ள ரஜினி திட்டம்..?

By Asianet TamilFirst Published Dec 21, 2020, 9:32 PM IST
Highlights

நடிகர் ரஜினிகாந்த் தான் தொடங்க உள்ள கட்சியை எம்.ஜி.ஆர். பிறந்த தினமான ஜனவரி 17-ம் தேதி தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

கடந்த டிசம்பர் 2ம் தேதி ரஜினி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31 அன்று அதற்கான தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.  இதனையடுத்து கட்சி தொடங்கும் பணிகளை ரஜினி மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் உள்ள ரஜினி, கட்சி அறிவிப்புக்காக 29ம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி தன்னுடைய கட்சியை எம்.ஜி.ஆர். பிறந்த நாளான 17ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே எம்.ஜி.ஆர். ஆட்சியை தன்னால் அமைக்க முடியும் என்று இரு ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி தெரிவிருந்த நிலையில், தன்னுடைய கட்சிக்கு எம்.ஜி.ஆர். அனுதாபிகளை ஈர்க்கும் வகையில் அவருடைய பிறந்த நாளில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மதுரையிம் பிரமாண்ட மாநாடு அல்லது பொதுக்கூட்டம் நடத்தவும் ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான ஆலோசனையில் ரஜினி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

click me!