ஒரு நாளைக்கு ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.4.24 லட்சம் இழப்பு. கண்டுபிடித்து ஆப்பு அடித்த நிர்வாகம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 3, 2021, 12:34 PM IST
Highlights

11 முதன்மை முகவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்து ஆவின் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவின் தினசரி விற்பனை அளவை எட்டாததாலும், கூடுதல் நிதியிழப்பை தவிர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆவினில் இருந்து பால், பால் சார்ந்த பொருட்களை வாங்கி மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யும் பொறுப்பை முதன்மை முகவர்கள் மேற்கொண்டு வந்தனர்.விற்பனையின் எண்ணிக்கையை உயர்த்தாததாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டாததாலும், தினசரி ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.4.24 லட்சம் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும் 11 முதன்மை முகவர்களின் ஒப்பந்தம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

முதன்மை முகவர்களான பாலசுப்பிரமணியம், புஷ்பராஜ், பாலமுருகன், சக்திவேல், கீதா, தங்கம், பழனிசாமி, தங்கதுரை, நாகமணி, ப்ளோரோ முகமை, சாமுவேல் ஞானராஜ் ஆகியோருடனான ஒப்பந்தம் ரத்து எனவும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
click me!