10 வகுப்பு படித்த 50 லட்சம் பெண்களுக்கு வேலை... திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு...!

By vinoth kumarFirst Published Mar 19, 2019, 11:08 AM IST
Highlights

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், நடுத்தர குடும்பத்தினர் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், நடுத்தர குடும்பத்தினர் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.

* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.

* வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்.

* மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

* மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும்.

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்.

* சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய திட்டம் தொடங்கப்படும்.

* 10-ம் வகுப்பு வரை படித்த சுமார் 50 லட்சம் பெண்கள் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

* உரிமம் முடிந்த பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்.

* கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணத்திற்கு பட்ஜெட்டில் அரை விழுக்காடு நிதி ஒதுக்கப்படும்.

* கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில்  வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

* கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.

* நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்.

* காவிரி படுகையை பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

* சேது சமுத்திர திட்டம் பணிகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.  

* பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்பட்ட விலை முறைக்கு கொண்டு வரப்படும்.

* பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்களுக்கு இலவச ரயில் பயண சலுகை என திமுப அறிக்கையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

click me!