தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. அப்ப பாஜக? ABP CVoter கருத்துக்கணிப்பு..

By Ramya s  |  First Published Mar 13, 2024, 12:06 PM IST

2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..


2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் எந்த கட்சி பெறும், அடுத்த பிரதமராக போவது யார் என்று பல்வேறு முன்னணி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன. அந்த வகையில் 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மக்களவைத் தேர்தல் 2024க்கான சமீபத்திய ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மாநிலத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 31 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும்,  இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

உங்க விளம்பர அரசியலுக்காக ஸ்கூல் வேனை பிடுங்கி கொள்வீர்களா? திமுகவுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது! அண்ணாமலை!

வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை, திமுகவுக்கு 54.7% வாக்கு சதவீதம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 27.8% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது இடம் 10.9% வாக்குகளுடன் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்றும், மற்ற கட்சிகள் 6.8% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாடு கூட்டணி நிலவரம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய முஸ்லீம் லீக், கொ.ம.தே.க கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியையும் ஒதுக்கி உள்ளது. அதே போல் விசிகவுக்கு 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுக தனது தொகுதிப் பங்கீடு விவரங்களை இன்னும் வெளியிடவில்லை, இருப்பினும் பாட்டாளி மக்கள் கட்சி (பிஎம்கே) மற்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) ஆகியவற்றுடன் அதிமுக கூட்டணி அமைக்க உள்ள தகவல்கள் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 லோக்சபா தொகுதிகளை ஒதுக்க உள்ளதாகவும் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை.

1000 ரூபாய் பிச்சை காசா.? குஷ்புவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து போரட்டத்தில் இறங்கிய திமுக

இதற்கிடையில், தமிழகத்தில் பாஜக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் (AMMK) தனது கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் அணியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். 

click me!