கையாலாகாத எடப்பாடி பழனிசாமி... அலறவிடும் டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published Apr 6, 2019, 5:44 PM IST
Highlights

ஜெயலலிதா மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு, மோடிக்கு பயந்து கொண்டு ஆட்சியை நடத்துகிறது. மேலும் திமுக மக்கள் செல்வாக்கு உள்ளது போல் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு, மோடிக்கு பயந்து கொண்டு ஆட்சியை நடத்துகிறது. மேலும் திமுக மக்கள் செல்வாக்கு உள்ளது போல் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

கரூர் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன்  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- எதிரணியில் ஆளும் கட்சி சார்பில் நிற்கும் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தம்பிதுரைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எவ்வாறு வர வேற்பு கொடுக்கிறார்கள் என்பதை கண்டிருப்பீர்கள். காரணம், தொகுதிக்கு எதுவும் செய்யாத மக்களவை உறுப்பினர். அவர் தத்தெடுத்த கிராமத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் குறைபாடு என்றார்.  

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன செய்தது. 2004-ல் இருந்து 2014 வரை ஆட்சியில் இருந்த போது நமது ஜீவாதார பிரச்சினையாகிய காவேரி பிரச்சினையில் கூட காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் சொல்கிறார், நான் செல்போனில் பேசியே ராகுல் காந்தியிடம் எல்லா திட்டங்களையும் பெற்று தருவேன் என்று கூறுகிறார். 

மேலும் தமிழக மக்களை எல்லாம் ஏமாற்றி வாக்கு வாங்கி வென்று விடலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. தேசிய கட்சிகளை நம்பி பயன் இல்லை என்பதால்தான் கடந்த 2014 தேர்தலில் ஜெயலலிதாவை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் உயிரோடு இருந்த வரை தமிழகத்தை பாதிக்கின்ற, குறிப்பாக விவசாயத்தை பாதிக்கின்ற எந்தவொரு திட்டத்தையும் அனுமதி அளி்த்திருக்கமாட்டார். 

அவரது மறைவிற்கு பிறகு கையாலாகாத பழனிசாமி அரசு, மோடிக்கு பயந்து கொண்டு சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தால் அந்த திட்டம் இன்றைக்கு காவேரி மேலாண்மை ஆணையமாக வந்திருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். நீரில் மூழ்கிய கப்பலாக  திமுக உள்ளது. திமுக மக்கள் செல்வாக்கு உள்ளதுபோல் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கிறது என விமர்சனம் செய்துள்ளார்.

click me!