ஆணுறுப்பில் பலத்த காயம்.. அந்த போலீசாரை சும்மாவிடாதீங்க.. ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சி.!

Published : Jan 17, 2022, 06:26 AM IST
ஆணுறுப்பில் பலத்த காயம்.. அந்த போலீசாரை சும்மாவிடாதீங்க.. ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சி.!

சுருக்கம்

பிரபாகரனுடைய ஆணுறுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  பின்னர் இருவர் மீதும்  குற்ற எண் 8/2022 U/S 457,380 IPC வழக்கு பதிவு செய்து, கடுமையாக தாக்கப்பட்ட பிரபாகரனை 11.01.22 அன்று நாமக்கல் சப்ஜெயிலில் அடைத்துள்ளனர்.  உடல்நிலை மேலும் மோசமானதால் 12.01.22 அன்று சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

காவல்துறையினரின் அட்டூழியங்கள் தொடராதவண்ணம் காவல்துறையில் உரிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, கருப்பூரைச் சேர்ந்த 45 வயதான மாற்றுத்திறனாளி ஏ. பிராபகரன்  மற்றும் அவரது மனைவி அம்சலா ஆகியோரை நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் 8.1.2022 அன்று, வீட்டிலிருந்தவர்களை விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். நேரடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல், காவல்துறை குடியிருப்பு ஒன்றில் சட்டவிரோதமாக  வைத்து மூன்று நாட்கள் இருவரையும் அடித்து சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர். 

இதன் காரணமாக பிரபாகரனுடைய ஆணுறுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  பின்னர் இருவர் மீதும்  குற்ற எண் 8/2022 U/S 457,380 IPC வழக்கு பதிவு செய்து, கடுமையாக தாக்கப்பட்ட பிரபாகரனை 11.01.22 அன்று நாமக்கல் சப்ஜெயிலில் அடைத்துள்ளனர்.  உடல்நிலை மேலும் மோசமானதால் 12.01.22 அன்று சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். போலீசாரின் இத்தகைய மனிதாபிமானமற்ற சட்டவிரோத செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வழக்கை மூடி மறைப்பதற்கு பல முயற்சிகளை காவல்துறையினர் செய்துள்ளனர். இத்தகவலறிந்தவுடன், சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்திய பின்னணியில், மூன்று காவல்துறை உதவி ஆய்வாளர்கள் சந்திரன்,  பூங்கொடி, தலைமை காவலர் குழந்தைவேலு ஆகியோர் மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குற்றமிழைத்த போலீசாரை தற்காலிக பணிநீக்கம் செய்வது என்பது கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

எனவே, குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து,  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும், அம்சலா மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், உயிரிழந்த  பிரபாகரனின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டுமெனவும், இதுபோன்ற காவல்துறையினரின் அட்டூழியங்கள் தொடராதவண்ணம் காவல்துறையில் உரிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!
எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!