அடேயப்பா….! 7 முனை போட்டி… 65,000 பேர்… முடிந்தது உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல்

By manimegalai aFirst Published Sep 22, 2021, 6:41 PM IST
Highlights

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 புதிய மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கியது.

அனைத்து கட்சி வேட்பாளர்களும், சுயேட்சையினரும் ஆர்வமுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை கிட்டத்தட்ட 64 ஆயிரம் பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இன்று கடைசி நாள் என்பதால் பலரும் போட்டிக் போட்டுக் கொண்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கடந்த 6 நாட்களாக நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 65 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்திருக்கிலாம் என்று நம்பப்படுகிறது. வேட்பு மனுக்கள் மீது நாளை பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வரும் 25ம் தேதி கடைசி நாளாகும். 

இந்த தேர்தலில் மொத்தம் 7 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன.

வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றதை தொடர்ந்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரங்களில் இறங்கி உள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 12ம் தேதி எண்ணப்படுகிறது.

click me!