நகைக்கடன் தள்ளுபடி... வசூலில் திமுக கிடுக்குப்பிடி... ஜி.கே.வாசன் வேதனை..!

By Thiraviaraj RMFirst Published Sep 22, 2021, 4:48 PM IST
Highlights

தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அனைத்து நகை கடன்களும் ரத்து செய்யப்படும் என்று தி.மு.க கூறியது.

ஐந்து பவுனுக்கு மேல் நகைக்கடன் வைத்துள்ளவர்களிடம் உடனடியாக கடன் தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று கூறுவது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்தல் ஆணையம் முறையாக கோட்பாடுகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்பது மாவட்டங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் கலந்து பேசி தேர்தலில் நிற்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பா,.ம.க, அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஜி.எஸ்.டி கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு இருக்க வேண்டும். அவருடைய பேச்சுக்கள் சர்ச்சையாகி வருகிறது. மக்கள் போற்றும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடு மற்றும் பேச்சுக்கள் இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. ஆனால் தற்போது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறது.

 தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அனைத்து நகை கடன்களும் ரத்து செய்யப்படும் என்று தி.மு.க கூறியது. தற்போது ஐந்து பவுனுக்கு மேல் நகைக்கடன் வைத்துள்ளவர்களிடம் உடனடியாக கடன் தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று கூறுவது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது. தமிழகத்தில் யூரியா பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதற்கு அதிகாரிகளின் முழு கவனமும் இருக்க வேண்டும். மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. அரசின் செயல்பாட்டை மக்களை கூர்ந்து கவனித்து வருகின்றனர்’’என அவர் தெரிவித்தார். 

click me!