உள்ளாட்சி தேர்தலில் கள்ளாட்டம்... மீண்டும் மீண்டும் தடைபோடும் தமிழக அரசு..!

Published : May 04, 2019, 01:11 PM ISTUpdated : May 04, 2019, 01:14 PM IST
உள்ளாட்சி தேர்தலில் கள்ளாட்டம்... மீண்டும் மீண்டும் தடைபோடும் தமிழக அரசு..!

சுருக்கம்

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தற்போது மக்களவை தேர்தல் நடந்து வருவதால் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து மாநிலத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை பெற இயலவில்லை. வாக்காளர் பட்டியலையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. எனவே, தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால், குடிநீர், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப்பணிகள் தேங்கியுள்ளன என்ற மனுதாரர் வாதம் ஏற்புடையதல்ல. உள்நோக்கம் கொண்டது. தமிழக அரசு, தூய்மை காவலர்கள் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்து பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாவே தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், தொகுதி பங்கீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்திருந்தது. இப்போது மக்களவை தேர்தலை காரணம் காட்டி, தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்