உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு.. 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது..!

By vinoth kumarFirst Published Sep 13, 2021, 6:06 PM IST
Highlights

நாளை மறுநாள் முதல் (செப்டம்பர்15) உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கவுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிகிறது. செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்ததாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 9ம் தேதியும் நடைபெறுகிறது. அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

நாளை மறுநாள் முதல் (செப்டம்பர்15) உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கவுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிகிறது.செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களாளர்கள் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். 

14,573 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 27,000 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பதால் வாக்குச்சீட்டு முறையில் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் காவலர்கள் ஈடுபடவுள்ளனர். 

முதற்கட்ட தேர்தலில் 41 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். 2-ம் கட்ட தேர்தலில் 34 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றிய குழு துணைத்தலைவர் பதவிகளுக்கும் அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கும் அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.நேரடி தேர்தலில் வென்றவர்கள் அக்டோபர் 20-ம் தேதி பதவி ஏற்பார்கள். நேரடி தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் வாக்களிப்பார்கள். பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார். 

click me!