முடிந்தது முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு…. 6 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு டோக்கன்…

By manimegalai aFirst Published Oct 6, 2021, 8:02 PM IST
Highlights

தமிழகத்தில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டு இருந்த உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

சென்னை: தமிழகத்தில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டு இருந்த உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று அறிவித்தபடி காலை 7 மணிக்கு தொடங்கியது.

காலையில் பல மாவட்டங்களில் சுறுசுறுப்பாக நடந்த வாக்குப்பதிவு பின்னர் நேரம் ஆக, ஆக மந்தமானது. பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு சூடுபிடித்தது.

குறிப்பாக மாலை நேரத்தில் நெல்லை, தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே 6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு உரிய முறையில் வாக்களிக்க டோக்கன் வழங்கப்பட்டது.

அறிவித்தப்படி வாக்குப்பதிவுக்கான நேரம் மாலை 6 மணியுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

click me!