நான் இருக்கும்போது என்னுடைய வாக்கினை செலுத்தியது யார் என தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன், அந்தோனியம்மாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நான் இருக்கும்போது என்னுடைய வாக்கினை செலுத்தியது யார் என தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன், அந்தோனியம்மாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
undefined
தமிழ்நாட்டின் காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுகான முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படாவிட்டாலும் ஒரு சில ஊர்களில் வேட்பாளர்கள் இடையே மோதல், கள்ள ஓட்டு பிரச்சினை என ஒருவழியாக முதல்கட்ட தேரதல் முடிந்திருக்கிறது. இதனிடையே கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண்ணுக்கு பெரும் துயரம் நேர்ந்திருக்கிறது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் தேர்தல் அரசியல் கூறியிருக்கும். அப்படத்தில் கூகுள் நிறுவன சி.இ.ஓ.—வாக பணியாற்றும் விஜய், தமது வாக்கை செலுத்த தனி விமானம் பிடித்து சென்னை வருவார். அதற்குள் விஜயின் ஓட்டை, காமெடி நடிகர் யோகி பாபு செலுதியிருப்பார். அதன்பின்னர் சட்டப் போராட்டம் நடத்தி தமது வாக்கை மீண்டும் வாங்கியிருப்பார் நடிகர் விஜய்.
இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் ஒரு காட்சி அறங்கியேறியுள்ளது. ரிஷிவந்தியம் அடுத்த வாணாபுரத்தை சேர்ந்தவர் அந்தோனியம்மாள். தற்போது மும்பையில் வசிக்கும் இவர், உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக கடமையாற்றிட சொந்த ஊருக்கு திரும்பினார் அந்தோனியம்மாள். இந்தநிலையில் இன்று காலை வாக்குப்பதிவு சென்ற அந்தோனியம்மாளிடம் அவரது வாக்கு செலுத்தப்பட்டு விட்டதாகக் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தோனியம்மால் தாம் இருக்கும் போது என்னுடைய ஓட்டை செலுத்தியது யார் என அதிகாரிகளிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படத்தில் விஜய்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பும் நிஜத்தில் அந்தோனியம்மாளுக்கு கிடைக்கவில்லை.