இடஒதுக்கீடு என்னவென்ற தெரியாத திமுக... மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்த அன்புமணி ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Dec 10, 2019, 12:58 PM IST
Highlights

இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாத திமுக தோல்வி பயத்தின் காரணமாக நீதிமன்றம் சென்றிருக்கிறது. உள்ளாட்சித் தோ்தலில் எந்தெந்த தொகுதிகள் என்ன பிரிவினருக்கு என்ற விபரமும், வார்டுகள் விபரமும் இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு என்றால் என்னவென்ற தெரியாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தின் காரணமாக உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் என பாமக இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் கட்சி நிர்வாகியின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீா்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் வார்டுகள் முறையாக பிரிக்கப்படவில்லை, இட ஒதுக்கீடுகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருப்பது கேவலமாக உள்ளது. 

இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாத திமுக தோல்வி பயத்தின் காரணமாக நீதிமன்றம் சென்றிருக்கிறது. உள்ளாட்சித் தோ்தலில் எந்தெந்த தொகுதிகள் என்ன பிரிவினருக்கு என்ற விபரமும், வார்டுகள் விபரமும் இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என திமுக கூறுவதை ஏற்க முடியாது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததால் பயம் வந்துவிட்டது என்றார். 

இனி திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் இனிமேல் நம்பமாட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். வெங்காயத்தின் விலை இன்னும் சில நாட்களில் குறையும் என்றும் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

click me!