அடி தூள்.. ஒரு வார காலத்தில் மகளீர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் ரத்து.. அமைச்சர் ஐ. பெ அதிரடி சரவெடி.

By Ezhilarasan Babu  |  First Published Oct 17, 2022, 1:26 PM IST

அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்து அதற்கான வசதிகள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். 


அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்து அதற்கான வசதிகள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறந்து வைத்து அவர், இவ்வாறு கூறினார். அந்நிகழ்ச்சியில் அவர் மேடையில் பேசிய விவரம் பின்வருமாறு:-

மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கும். சுய உதவி குழு  கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது.  தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும்,  தமிழக முதலமைச்சர் மகளிர் சார்ந்த திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை, முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சுய உதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள்  எந்தவித கடன் கேட்டு வந்தாலும் அவர்களுக்கு கடன் கொடுக்க மத்திய கூட்டுறவு வங்கி தயாராக இருக்கிறது எனக் கூறினார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்தது ஏன்..? சபாநாயகர் அப்பாவு விளக்கம்

undefined

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழக முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, 2750 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் கடனைத் தள்ளுபடி செய்து பல லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுத்தார். சுய உதவி குழு கடன்களுக்கான வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, எப்படி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அதுபோல சுய உதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசிதுகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படியுங்கள்:  இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை.. காவல் துறை அதிரடி.

மொத்தத்தில் 99.5 சதவீதம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.  தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் வந்து அதற்கான பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார். மாநில அரசின் திட்டங்களை மத்திய அரசு அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறார்களே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  மாநில அரசு வெளிப்படையாக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது இதை யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என்றார். 
 

click me!