இந்தியா முழுவதும் விவசாய கடன் வட்டி ரத்து !! இலவச பயிர் காப்பீடு !! மோடியின் அடுத்த அதிரடி திட்டம் !!

By Selvanayagam PFirst Published Jan 28, 2019, 9:09 AM IST
Highlights

வரும் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விவசாயிகளுக்கு பல முக்கிய சலுகைகைள மத்திய அரசு அறிவிக்கவுள்ளது. அதன் முதல் கட்டமாக நாடு முழுவதிலும் உள்ள விவசாய கடன் வட்டி முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் இலவச பயிர் காப்பீடு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்க உள்ளது.

அண்மையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. இந்த மாநிலங்களில் எல்லாம் விவசாயிகளின் பிரச்சனை முக்கியமாக பார்க்கப்பட்டது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர்  ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தது. இந்நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை, விரைவில் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்குப் பின், விவசாயிகள் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் முயற்சியை மத்திய அரசு  துவங்கியுள்ளது.

தற்போது விரைவில், நாடாளுமன்றத்  தேர்தல் நடக்க உள்ளதால், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.முறையாக கடனை செலுத்தும் விவசாயிகளுக்கான வட்டியை முழுமையாக நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் மட்டும், அரசுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். அதேபோல், பயிர்க் காப்பீட்டு திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே ஏற்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில், ஒரு குறிப்பிட்ட தொகையை நேரடியாக செலுத்தும் திட்டம் உள்ளது.  இத்திட்டங்களை பட்ஜெட்டுக்கு முன்பாகவே அமல்படுத்த மத்திய அரசு திட்டட்டுள்ளது.

click me!