பட்டியல் சமூகத்தவரின் காவலனா..? திமுகவின் குற்றப் பின்னணியை லிஸ்ட் போட்ட மூத்த தலித் தலைவர்..!

By Thiraviaraj RMFirst Published Oct 12, 2020, 11:35 AM IST
Highlights

ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைத்து அவமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றப் பின்னணியில் திமுக கட்சியினரே இருக்கின்றனர் என வேதனை தெரிவித்துள்ளார் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், மூத்த தலித் தலைவருமான தடா.பெரியசாமி. 
 

ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைத்து அவமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றப் பின்னணியில் திமுக கட்சியினரே இருக்கின்றனர் என வேதனை தெரிவித்துள்ளார் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், மூத்த தலித் தலைவருமான தடா.பெரியசாமி. 

இதுகுறித்து அவர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஊராட்சி மன்ற தலைவர் சகோதரி ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்து அவமானப்படுத்திய திமுகவினரின் நடவடிக்கையை மனிதநேயம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். திமுகவினரின் தீண்டாமையை வன்மையாக கண்டிக்கிறேன். பட்டியல் சமுதாய ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்ந்து தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி வருகிறார்கள். அரசு இதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள பட்டியல் சமுதாய ஊராட்சி மன்ற தலைவர்களின் நிலையை அறிய ஒரு ஆய்வு குழு அமைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

1997 மேலவளவு ஊராட்சி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பரையர்கள் எவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என உயர்சாதியினரால் மிரட்டப்பட்டனர். எதிர்பை மீறி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய பஞ்சாயத்துகளின் தலைவர் பதவி பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக இங்கு தேர்தலே நடத்த முடியாத சூழல்நிலவியது. கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தம். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவரைக் கடந்த சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற விடாமல் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் தடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலினத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி பொறுப்பு வகித்து வருகிறாா். கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைத்து அவமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனை அளிக்கிறது. பல நிகழ்வுகளின் குற்றப் பின்னனியில் திமுக கட்சியினரே இருக்கின்றனர்.

பட்டியல் சமுதாய ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்ந்து தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி வருகிறார்கள்.அரசு இதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள பட்டியல் சமுதாய ஊராட்சி மன்ற தலைவர்களின் நிலையை அறிய ஒரு ஆய்வு குழு அமைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தடா பெரியசாமி pic.twitter.com/PM4gsxiIZQ

— தடா.பெரியசாமி (@tadaperiyasami)

 

பட்டியல் சமூகத்தவரின் காவலன் என காட்டிக்கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலின் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை சம்பவத்திற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை. திமுக கட்சியினர் தொடர்ந்து சாதி வெறி போக்கை வெளிப்படுத்தியே வருகின்றனர்’’ எனத் தெரிவித்துள்ளார். 

click me!