உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும், கூட்டணி கட்சிகளை மிரட்டிய திமுக..?? அமைச்சர் அதிரடி தகவல்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2020, 11:09 AM IST
Highlights

எங்கள் கட்சியில் கூட்டணி சேரும் கட்சிகள் தனித் தன்மை உடையது, தனிக் கொள்கை உடையது, அவைகளை முறைப்படி சமநிலையில், சம மரியாதையுடன்  நாங்கள் கூட்டணியில் நடத்துவோம். அதற்கேற்ப எங்களின் செயல்பாடுகள் இருக்கும், திமுகவைபோல எங்கள் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று சர்வாதிகார சிந்தனையுடன் இருக்க மாட்டோம், 

11 பேர் கொண்ட ஆலோசனைக் குழு தன்னிச்சையாக செயல்பட முடியாது, அதன் முழு அதிகாரமும் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரிடம் உள்ளது என முன்னாள் அமைச்சரும், துணை அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.பி முனுசாமி கூறியுள்ளார். அதே நேரத்தில் எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கழகத் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமு கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வழங்கப்பட்ட இயக்கத்தை, நாங்கள் கண்ணியத்துடன் காப்பாற்றி வருகிறோம். தற்போது கழகத்தில் 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதற்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்படும் என்பதை தலைவர்கள் முடிவு செய்வார்கள். அந்த ஆலோசனை குழு தன்னிச்சையாக செயல்பட முடியாது. முழு அதிகாரமும் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரிடமுள்ளது. 

அந்த குழு ஆலோசனை வழங்கும் குழுவாக இருக்கும், கழகம் தொடர்ந்து ஆட்சி செய்வதை தடுக்க எங்களுக்குள் பிளவு ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் எண்ணினார்கள், ஆனால் தற்போது நல்லாட்சி நடந்து வருகிறது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நல்ல முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார், அவர் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்திக்க முடிவு செய்து கழகத்தில் முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, மாநில கட்சியாக இருந்தாலும் சரி, எங்களுடன் கூட்டணிக்கு வரும் போது நாங்கள் அறிவித்த முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக் கொள்பவர்கள் தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும். எந்தச் சூழ்நிலையிலும் தேர்தலை சந்திக்க தயாராக கழகம் உள்ளது. 

ஸ்டாலின் எப்படியாவது கழகம் பிரிந்துவிடும் அதில் குளிர்காயலாம் என்று நினைக்கிறார், ஆனால்  அது ஒருபோதும் நடக்காது, அதிமுக என்பது கூட்டுத் தலைமை இயக்கம், உடைப்பது என்பது இயலாத காரியமாகும், எங்கள் கட்சியில் கூட்டணி சேரும் கட்சிகள் தனித் தன்மை உடையது, தனிக் கொள்கை உடையது, அவைகளை முறைப்படி சமநிலையில், சம மரியாதையுடன்  நாங்கள் கூட்டணியில் நடத்துவோம். அதற்கேற்ப எங்களின் செயல்பாடுகள் இருக்கும், திமுகவைபோல எங்கள் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று சர்வாதிகார சிந்தனையுடன் இருக்க மாட்டோம், கூட்டணியில் உள்ள கட்சிகளை மிரட்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு என்ன ஆகும் என்று மக்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் என கூறியுள்ளார்.

 

click me!