மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவர்கள் சிலர் என்னை அடக்கி, ஒடுக்கினர்... நடிகை குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு..!

By vinoth kumarFirst Published Oct 12, 2020, 11:05 AM IST
Highlights

கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் அறியாதவர்கள் என்னை அடக்கி வைத்தனர் என காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் அறியாதவர்கள் என்னை அடக்கி வைத்தனர் என காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில மாதங்களாகவே தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களாக நடிகை குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி பரவியது. இதை மறுத்து வந்த நிலையில் நடிகை குஷ்பு நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென அவசரம் அவசரமாக பாஜகவில் இணைய டெல்லி புறப்பட்டு சென்றார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து குஷ்பு நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது. 
 

இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும் என்றார். மேலும், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராஜினாமா கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னைப் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியின் உயர்பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் தெரியாதவர்கள் ஒடுக்குகின்றனர். பணம் புகழை பெறுவதற்காக நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

click me!