2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம்... அதிரடி உத்தரவு..!

Published : Sep 02, 2021, 05:03 PM IST
2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம்... அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் விற்கப்படும் என  உத்தரவிடப்பட்டுள்ளது.   

2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் விற்கப்படும் என  உத்தரவிடப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், மதுபானம் வாங்க இரு டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்று காட்டினால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கச் செல்வோர் ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றுகளை மதுக்கடை ஊழியர்களிடம் காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையானது, இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து, சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். கூடிய விரைவில் நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸூம் போடப்படும்’’என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

 கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதற்காக பல்வேறு முகாம்கள் நடந்துவரும் நிலையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?