அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக.. திமுகவுடன் கைகோர்க்கவும் வாய்ப்புள்ளது.. விஜய பிரபாகரன் தகவல்..!

By vinoth kumarFirst Published Dec 21, 2020, 12:34 PM IST
Highlights

தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை என்று ஒருத்தவர் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். இவ்வளவு நாட்களாக அண்ணி அண்ணி என்று கூறிவிட்டு இப்போது வில்லி போல் பார்ப்பது என்ன நியாயம் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். 

தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை என்று ஒருத்தவர் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். இவ்வளவு நாட்களாக அண்ணி அண்ணி என்று கூறிவிட்டு இப்போது வில்லி போல் பார்ப்பது என்ன நியாயம் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் இருந்து வருகின்றன. இதில் பாஜகவுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை அதிமுக உறுதி செய்துவிட்டது. ஆனால், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தற்போது வரை பாஜக அங்கீகரிக்கவில்லை. இதே போல் தேமுதிகவும் கூட்டணி குறித்து அடுத்த மாதம் அறிவிக்க உள்ளதாக கூறி வருகிறது. பாமகவும் கூட அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், திமுகவுடனும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக தேமுதிகவின் விஜய பிரபாகரன் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார். விஜய பிரபாகரன் கூறுகையில்;- கூட்டணி பேச்சுவார்த்தையின்போது 40 தொகுதிகள் ஏன் தேமுதிகவுக்கு அளிக்க வேண்டும் என திமுகவோ, அதிமுகவோ கேட்டால் அவர்களிடம் அதற்கான பதிலை சொல்வோம் என்றார்.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுமா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென பல்வேறு தென் மாவட்ட நிர்வாகிகளும், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டு வட மாவட்ட நிர்வாகிகளும் கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் விஜயகாந்த் எடுப்பதுதான் இறுதி முடிவு, அதற்கு நாம் கட்டுப்பட வேண்டும் எனத் தெரிவிப்பேன். தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை என்று ஒருத்தவர் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். இவ்வளவு நாட்களாக அண்ணி அண்ணி என்று கூறிவிட்டு இப்போது வில்லி போல் பார்ப்பது என்ன நியாயம்.

 

மேலும், திமுக அல்லது அதிமுக என எந்தக் கூட்டணியில் இருந்தாலும் யாரை முன்னிறுத்துகிறார்களோ அவர்களை ஏற்று பணியாற்றுவோம். மூன்றாவதாக ஓர் அணியை அமைத்தால் அதற்கு நாங்கள்தான் தலைமை ஏற்போம். கலைஞர், ஜெயலலிதா இருந்தபோது கட்சி தொடங்கி தன்னை நிரூபித்தவர் விஜயகாந்த். ஆகவே, மற்ற கட்சிகளின் கீழ் கூட்டணியில் இருக்க மாட்டோம் மற்றும் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார். 

click me!