ஜானகி போல சசிகலாவும் பெருந்தன்மையோடு கட்சியை விட்டுக் கொடுக்க வேண்டும்.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து.

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2021, 4:16 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் மனைவி  வி.என் ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும், 

சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் செல்வதை ஏற்க முடியாது எனவும், எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வு குறித்த திமுக அரசு முன்னுக்கு பின் முரணாக முக்கியமாக மக்களையும் மாணவர்களையும் திசை திருப்பும் வகையிலும் ஏமாற்றும் விதமாக பேசி வருகிறார்கள்.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் என்று பேச்சை மாற்றி பேசுகிறார்கள். 2010ம் ஆண்டு திமுக அரசு மத்திய அரசாக இருந்த காங்கிரசின் முழு ஆதரவோடு  நீட் தேர்வை கொண்டு வர காரணமாக இருந்துவிட்டு, தற்போது மாற்றுப்பட்ட கருத்தை பேசி வருகிறார்கள். நீட் தேர்வு உண்டா இல்லையா என்பதை திமுக தெரிவிக்க வேண்டும், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது உண்மைக்கு மாறான ஒன்று. கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக அரசு என்றார்.

சசிகலா அதிமுக கொடி கட்டி காரில் செல்வதை ஏற்க முடியாது, எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை என்று கூறினார். சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அதிமுக அவைத்தலைவர்  மதூசூதனனை சந்திக்க சென்றதை அதிமுக விமர்சிக்க விரும்பவில்லை. முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் மனைவி  வி.என் ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும், மாறாக தடையாக இருக்க கூடாது என்றார். உதயநிதி ஸ்டாலின்  படத்தை சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் தனது அறையில் மாட்டியது விதிமீறலாகும், சட்ட அமைச்சர் தன் பூஜை அறையில் வேண்டுமானால் உதயநிதி படத்தை  வைத்து பூஜை செய்யட்டும் அதை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் கூறினார்.

 

click me!