அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது சரியில்லை.. கொந்தளிக்கும் டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published Jul 20, 2021, 4:09 PM IST
Highlights

கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்காக மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் அப்பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

சுருக்குமடி வலை விவகாரத்தில் போராடும் மீனவர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சுருக்கு மடி வலை விவகாரத்தில் போராடும் மீனவர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்காக மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் அப்பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

இதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது சரியானதல்ல. மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் நம்முடைய மீனவர்கள் பாதிக்கப்படாத அளவுக்கு சுருக்குமடி வலை பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

click me!