தட்டி தூக்கிய கோவை, திருப்பூர்... மொத்தம் 65 ஆயிரம் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2021, 4:03 PM IST
Highlights

இதனால், உலக சுகாதார நிறுவனம் இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியளித்தது. இதனை தொடர்ந்து, கர்பினி தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 65 ஆயிரம் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக கோவை மற்றும் திருப்பூரில் 6 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 

கொரோனா இரண்டாம் அலையில் கர்பினி தாய்மார்கள் மற்றுப் பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால், உலக சுகாதார நிறுவனம் இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியளித்தது. இதனை தொடர்ந்து, கர்பினி தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. 

இதுவரை தமிழகத்தில் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில் 65,829 பாலூட்டும் தாய்மார்கள் முதல் தவனை தடுப்பூசியும், 258 பேர் இரண்டாம் தவனை தடுப்பூசியும் என மொத்தம் 65,929 பேர் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 6,453 பேரும், திருப்பூரில் 6,142 பேரும், ஆத்தூரில் 4,150 பேரும் செலுத்தியுள்ளனர். 

குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 பேரும், சென்னையில் 2,680 பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இரண்டாவது தவனை தடுப்பூசியானது சேலம் மாவட்டத்தில் 98 பேரும், விருதுநகரில் 65 பேரும் செலுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கு 100 சதவீதமும் தடுப்பூசி செலுத்துவதற்காக பொது சுகாதாரத்துறை சார்பில் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
 

click me!