குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் - நீதிபதி கடும் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Sep 14, 2021, 1:29 PM IST
Highlights

ஒரே அனுமதிச் சீட்டை பயன்படுத்தி லாரிகளில் பலமுறை கற்கள், மணல் ஏற்றிச்செல்லும் குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஒரே அனுமதிச் சீட்டை பயன்படுத்தி லாரிகளில் பலமுறை கற்கள், மணல் ஏற்றிச்செல்லும் குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குவாரிகளில் இருந்து கற்கள், மணல் ஏற்றிச்செல்லும் லாரியில் ஒவ்வொரு நடைக்கும் தனித்தனியாக அனுமதிச் சீட்டு வழங்கப்பட வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர்  தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது  குவாரிகளில் இருந்து வெளியேறும் லாரிகள், தங்களுக்கான அனுமதிச் சீட்டில் தேதி, நேரத்தை எண்ணாலும், எழுத்தாலும் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும் என்றும், இதனை மீறும் குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

click me!