உள்ளாட்சி தேர்தல் முடியட்டும் அப்புறம் பார்க்கலாம்... திமுக போடும் செம ப்ளான்..!

By Thiraviaraj RMFirst Published Aug 7, 2021, 5:41 PM IST
Highlights

வாரியத் தலைவர் பதவிகளை ஒரு ஆண்டு கழித்து நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

வாரியத் தலைவர் பதவிகளை ஒரு ஆண்டு கழித்து நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

பாடநூல் வாரியத்தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி, வக்பு வாரிய தலைவர், பீட்டர் அல்போன்ஸுக்கு சிறுபான்மை ஆணைய வாரிய தலைவர்போன்ற சில வாரியங்களுக்கே தலைவர் பதவி நியமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள துறைகளுக்கு கடும் போட்டி நிலவுவதால் யாருக்கு பதவி கொடுப்பது என்கிற குழப்பத்தில் தாமதமாக்கும் முடிவிற்கு வந்துள்ளது. 

தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வாரியங்கள் இருக்கிறது. ஒன்றிரெண்டு வாரியங்களுக்கு மட்டுமே தான் சமீபத்தில் தலைவர்களை நியமித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளும், தங்களுக்கு சில வாரியங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே, வாரியத் தலைவர் பதவிகளை கொடுத்துவிட்டால், பதவி கிடைக்காதவர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபாடு காட்ட மாட்டார்கள்.

அதனால், உள்ளாட்சி தேர்தல் களேபரங்கள் எல்லாம் முடிந்த பிறகு, அடுத்த ஆண்டு வாரிய தலைவர் பதவிகளை நிரப்பிக் கொள்ளலாம் என ஆளுங்கட்சியில் முடிவு எடுத்து இருப்பதாக கூறுகிறார்கள். 

click me!