ரேப் அக்யூஸ்ட் உடன் பிள்ளைப் பெற்றுக் கொள்ள ஆசை.. இளம் பெண் விபரீத முடிவு.. பரோலில் அனுப்ப சொல்லி அடம்..

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2021, 5:39 PM IST
Highlights

திருமணம் முடிந்த கையோடு  தாய்மை அடைய வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ள ஒரு ஏக்கம். அது ஒரு பெண்ணின் பிறவி பலன் என்றும் கூறப்படுகிறது. 

கற்பழிப்பு வழக்கு ஒன்றில் கணவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி தன் கணவனுடன் குழந்தை பெற்றுக்கொள்ள  தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்காக அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தின் படியேறி உள்ளார். இது மிகவும் விசித்திரமான வழக்கு என்பதால், என்ன தீர்ப்பு சொல்வது என்ற குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ள நீதிமன்றம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் இது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை விசாரித்து அறிக்கை சமர்பிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

 திருமணம் முடிந்த கையோடு  தாய்மை அடைய வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ள ஒரு ஏக்கம். அது ஒரு பெண்ணின் பிறவி பலன் என்றும் கூறப்படுகிறது. அந்த இனிமையான தருணத்தை அனுபவிக்க தனக்க உதவ வேண்டும் என திருமணமான ஒரு பெண் நீதிமன்றத்தின் கதவுகளை  தட்டியிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞருக்கும் அதை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் அவரது மூன்று நண்பருடன் சேர்ந்து வேறொரு  மைனர் பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதற்கான வழக்கு விசாரணையில் சச்சின் மற்றும் அவரது நண்பர்களுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்தது. 

இதில் ஒருபாவமும் அறியாத அவரது மனைவி தனது கணவனுக்கு சிறிது காலம் ஜாமின் வழங்க வேண்டும் என்றும், அவருடன் தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதால் நீதிமன்றம் இதை அனுமதிக்க வேண்டும் என்றும் உத்ரகாண்ட் உயிர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கணவனுடன் குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு மனைவியின் அடிப்படை உரிமை  எனவும் அவர்  தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பான வழக்காக மாறியுள்ளது.மேலும் தன் கணவருக்கு ஜாமீன் கிடைத்தால், தான் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர் நீதிமன்றத்தில்  மன்றாடி உள்ளார். உத்ரகாண்ட் உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இது போன்ற ஒரு வழக்கு நீதிமன்றம் சந்தித்ததில்லை என்பதே அதற்கு காரணம்.

இப்படி ஒரு வழக்கு நீதிமன்றம் தேடிவரும் என்று ஒருபோதும் நீதிபதிகள்  எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் ஆழ்ந்த குழப்பத்திற்கு சென்று நீதிபதிகள், இது குறித்து தங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும் இடைக்காலமாக கொடுத்துள்ள ஒரு உத்தரவில்,தந்தை இல்லாமல் ஒரு குழந்தையை வளர்ப்பது தாய்க்கு மிகசவலாக காரியம். தந்தை இல்லாமல் ஒருகுழந்தை வளர்வது அதன் மனநலத்தை பாதிக்கும் அபாயம் இருக்கிறது. என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ஒரு உறுதியான தீர்ப்பை வழங்க முடியாமல் திணறிவரும் நீதி மன்றம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் இதுபோன்ற வழக்குகள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டனவா என்பதை விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!