வரலாறு படைப்போம்... வாகை சூடுவோம்... ஓ.பி.எஸ் சூளுரை..!

Published : Oct 17, 2020, 12:33 PM IST
வரலாறு படைப்போம்... வாகை சூடுவோம்... ஓ.பி.எஸ் சூளுரை..!

சுருக்கம்

வரலாறு படைப்போம், வாகை சூடுவோம்... கட்சி கொடியேற்றி வைத்து ஓபிஎஸ் சூளுரைதார்.

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடியை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார்.

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், ‘’அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்ற வரலாற்றை படைப்போம், வாகை சூடுவோம்.’’எனக் கூறினார்.

 

தன் தாயார் மறைவையொட்டி, முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் இருப்பதால் இந்நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை. முன்னதாக 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக, நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தின்போதும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்றுச் சாதனையைப் படைப்போம் என உறுதி தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

Rahul Gandhi: சாதி ரீதியான சர்ச்சை பேச்சு? ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு!
Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!