இந்த விஷயத்தில் எப்போதும் உறுதியாக இருங்கள்..!! அதிமுகவுக்கு கி. வீரமணி கொடுத்த அட்வைஸ்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 17, 2020, 11:55 AM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து உலகத்தரம் என்ற தூண்டிலை பயன்படுத்தி, அதனை மத்திய அரசு தனது வசமாக்கி 69 சதவீத இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் பேராபத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர தயங்கக் கூடாது

அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்பதுடன், அதில் உறுதியாக இறுதி வரை இருக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து உலகத்தரம் என்ற தூண்டிலை பயன்படுத்தி, அதனை மத்திய அரசு தனது வசமாக்கி 69 சதவீத இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் பேராபத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர தயங்கக் கூடாது என்பதை நாமும், திமுக மதிமுக, காங்கிரஸ், இடதுசாரி கம்யூனிஸ்ட்,  விடுதலைச் சிறுத்தைகள் போன்ற பல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி அறப்போர்  ஆர்ப்பாட்டங்களை நடத்திய நிலையில், 

தமிழக அரசின் உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் அளித்துள்ள பேட்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்தர கல்வி நிறுவன அந்தஸ்து தந்து உயர் கல்வி  நிறுவனம் ஆக்குவதை தமிழக அரசு நான்கு காரணங்களுக்காக ஏற்காது என்று திட்டவட்டமாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அதனால் ஆபத்து. கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் அபாயம், வெளிமாநில மாணவர்களுக்கு கதவு முழுவதும் திறக்கப்பட்டு விடும், அரசுக்கு உட்பட்டதுதான் அண்ணா பல்கலைக்கழகம், ஆனால் துணைவேந்தர் சூரப்பா தனியே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்ட அதிகாரத்தை கையில் எடுத்து, தன்னிச்சையாக செயல்படுவது  கண்டிக்கத்தக்கது.

இந்த நிலைப்பாட்டில் தமிழக அதிமுக அரசு உறுதியாக இறுதிவரை இருப்பதோடு, எவ்வித நிர்பந்தத்திற்கும் பணிந்து விடக்கூடாது என்பதையும் வற்புறுத்துகிறோம். துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

 

click me!