அமெரிக்காவை அடித்து நொறுக்கிய கியூபா: சதிகளை முறியடித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு தேர்வு.

By Ezhilarasan BabuFirst Published Oct 17, 2020, 11:39 AM IST
Highlights

இந்த மகத்தான வெற்றியை கியூபா மதிக்கிறது, போற்றுகிறது என கியூப ஜனாதிபதி  மிகுவல் தியாஸ் கேனல் பெர்மடெஸ்  ட்விட் செய்துள்ளார். 

அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பு மற்றும் சூழ்ச்சிகளை முறியடித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு கியூபா ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் உறுப்பினர்களின் குழுவினருக்காக ஒதுக்கப்பட்ட 8 இடங்களில் கியூபாவும் ஒன்றாகும். ஐநா சபையில் 88% உறுப்பினர்கள் கியூபாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வழக்கம்போல் அமெரிக்காவின் சதி வேலைகள் நிர்பந்தங்கள் இதில் இருந்தன ஆனாலும் அது எடுபடவில்லை. ஐநா மனித உரிமைப் பேரவையின் உறுப்பினராக கியூபாவை தேர்ந்தெடுப்பதை தடுப்பதற்கான அமெரிக்காவின் எந்த நடவடிக்கையும் பலன் கொடுக்கவில்லை. 

இதில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த முயற்சிக்கும் தோல்வியே கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்கா விதித்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொரோனா காலத்தில் பல்வேறு உலக நாடுகளுக்கு மருத்துவ உதவி கரம் நீட்டிய  கியூபா சுமார் 170க்கும் அதிகமான நாடுகளின் ஏகோபித்த வாக்குகளை பெற்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கியூபாவுக்கு எதிராக அமெரிக்காவின் சதி வேலைகள் மற்றும் நெருக்கடிகள் இருந்தபோதும் உலக நாடுகள் கியூபாவை அங்கீகரித்திருக்கிறது. இந்த மகத்தான வெற்றியை கியூபா மதிக்கிறது, போற்றுகிறது என கியூப ஜனாதிபதி  மிகுவல் தியாஸ் கேனல் பெர்மடெஸ்  ட்விட் செய்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், மனிதநேயப் பணிகளை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் கொள்கைகளின் அடிப்படையிலான மனித உரிமைகளை கியூபா ஊக்குவித்து வருகிறது எனவும் கூறியுள்ளார். 

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் பார்ரிலாவும் , கியூபாவின் சாதனைகளை யாராலும் மறைக்க முடியாது, ஐநா உறுப்பு நாடுகளின் 88 சதவீத ஆதரவு கியூப மக்களின் தனியாட்சி பண்புரிமைக்கு  கிடைத்த பாராட்டே ஆகும் என்பதோடு, அமெரிக்காவின் ஒரு தலைப்பட்ச விரோத கொள்கைக்கு எதிரானது மற்றும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், பொருளாதாரம், வணிகம் மற்றும் நிதி கட்டுப்பாடுகள் போன்ற உரிமைமீறலுக்கு எதிரானது. இது கியுப மக்களின் மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் எனக் கூறியுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளில் கியூபா பங்கேற்று முறையாக செயலாற்றி வருகிறது. மனித உரிமைகளை கடைபிடிப்பதில் உறுதியான நடவடிக்கை, உலகளாவிய ஒத்துழைப்பு, முன்னேற்றங்கள் மூலம் கியூபா பெற்ற சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தின் வெளிப்பாடே இந்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். 

click me!