அவரு ஒரு ஆளா.? எதையோ பார்த்து ஏதோ குரைக்கிறது என்று எடுத்துகொள்வோம். H.ராஜாவை கேவலப்படுத்திய சேகர் பாபு.

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2021, 11:09 AM IST
Highlights

கோவில்களில் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயில் நிலங்கள் மீட்பு என அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எச். ராஜாவின் இந்து சமய அறநிலைத்துறை மீதானா ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் இந்து சமய அறநிலைத்துறை கருத்தில் கொள்ளாது என்றும், " எதையோ பார்த்து ஏதோ குரைக்கிறது"  என்று நினைத்துக் கொள்வோம் என அமைச்சர் சேகர் பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையை மற்றும் அதன் அமைச்சரை விமர்சித்து வரும் நிலையில் சேகர்பாபு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறையில் புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கோவில்களில் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயில் நிலங்கள் மீட்பு என அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் இந்து அறநிலைத்துறை வசம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்திநாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 132 கிரவுண்டு இந்து சமய அறநிலைத்துறை கையகப்படுத்தி உள்ளது, 250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்டு நிலத்தை இந்து சமய அறநிலைத்துறை தன்வசப்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள் : பெஞ்ச் தேய்த்து, ஹாயாக சம்பளம் வாங்கிய அதிகாரிகள்.. கண்டறிந்து ஆப்பு அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

இதையும் படியுங்கள் :  ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஆரம்பம் முதலே தட்டித்தூக்கிய திமுக.. பின்தங்கிய அதிமுக, காணாமல் போன பாமக..

முறையாக 78  நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நிலம் கையகப்பட்டுள்ளது. அதேபோல அறநிலையத்துறையில் உள்ள குறைகளை கூற மக்களுக்கு இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை 4500 புகார்கள் வந்துள்ளன என்றார், மேலும், எச்.ராஜா தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையை விமர்சித்து வருகிறார், அவரின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் இந்து சமய அறநிலைத்துறை கருத்தில் கொள்ளாது, "எதையோ பார்த்து ஏதோ குரைக்கிறது" என்று நினைத்துக் கொள்வோம் எச். ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்தார். திருநீர் மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது, விரைவில் அது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

click me!