யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குவது இல்லை.. அமைச்சர் மூர்த்தி..!

Published : Oct 12, 2021, 11:04 AM IST
யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குவது இல்லை.. அமைச்சர் மூர்த்தி..!

சுருக்கம்

மதுரையில் 2 அமைச்சர்கள் உள்ளோம் எங்காவது ரவுடியிசம் நடந்துள்ளதா இதுகுறித்து உரிய ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் யார் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தயங்கியதில்லை. 

103 ஜவுளிக்கடை நடத்தப்பட்ட  சோதனையில் ரூ.108 கோடிக்கு வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கமிஷன் வாங்குவதற்காகவே அரசு அதிகாரிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்தியுள்ளனர் என அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழக முதல்வர் வெளிப்படைத்தன்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். யார் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவது இல்லை. இதில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தலையிட கிடையாது. 

மதுரையில் 2 அமைச்சர்கள் உள்ளோம் எங்காவது ரவுடியிசம் நடந்துள்ளதா இதுகுறித்து உரிய ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் யார் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தயங்கியதில்லை. இன்றைக்கு காவல்துறை சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழகத்தில் இது போன்ற விஷயங்களுக்காக அமைச்சர்களோ மற்றும்  நிர்வாகிகளோ காவல்நிலையத்திற்கு ஒரு போன் கூட செய்தது கிடையாது என்றார். 

மேலும், 103 ஜவுளிக்கடை நடத்தப்பட்ட  சோதனையில் ரூ.108 கோடிக்கு வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கமிஷன் வாங்குவதற்காகவே அரசு அதிகாரிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்தியுள்ளனர் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!